வேலைவாய்ப்புக்கு தகுந்த பாடத்திட்டம் - Asiriyar.Net

Saturday, July 3, 2021

வேலைவாய்ப்புக்கு தகுந்த பாடத்திட்டம்

 



மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவதுடன், வேலைவாய்ப்புக்கு தகுந்த பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும், தேவையான வருவாய் வட்டங்களில், புதிய கல்லுாரிகள் துவக்கவும், முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


தமிழக அரசின், 2021 - 22ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதையொட்டி, தினசரி இரண்டு அல்லது மூன்று துறைகளின் ஆய்வு கூட்டத்தை, முதல்வர் நடத்தி வருகிறார். நேற்று உயர்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை ஆய்வு கூட்டம், தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.


உயர்கல்வித்துறை கூட்டத்தில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பல்கலைகளின் தரத்தை உயர்த்தவும் முதல்வர் அறிவுறுத்தினார். மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவது; வேலைவாய்ப்புக்கு தகுந்த பாடத்திட்டங்களை அறிமுகம் செய்வது; தேவையான வருவாய் வட்டங்களில், புதிய கல்லுாரிகள் துவக்குவது.கல்வி நிறுவனங்கள் தரத்தை உயர்த்துவது; தேசிய மதிப்பீடு மற்றும் தர சான்றிதழ் பெற முயற்சிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.


கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், வேலை வாய்ப்புக்கு உகந்த, புதிய பாடத் திட்டங்களை அறிமுகம் செய்வது; பல்கலைகளின் தரத்தை மேம்படுத்துவது; அண்ணா பல்கலையின் புதிய முயற்சியாக, அரசு உதவியுடன் அனைத்து துறைகளிலும், டிரோன்களை பயன்படுத்தும் வகையில், 'டிரோன் கார்ப்பரேஷன்' நிறுவ ஆலோசிக்கப்பட்டது.


மக்கள் நல்வாழ்வுத் துறை கூட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துமனைகள் ஆகியவற்றில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது; காலியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள் பொன்முடி, சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad