இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்கு எந்திரம். - Asiriyar.Net

Wednesday, April 7, 2021

இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்கு எந்திரம்.

 

சென்னை வேளச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் பிடிபட்டது.முகவர்கள் என அடையாள அட்டை அணிந்திருந்த 2 பேர் இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தை வைத்து கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் முதல்கட்ட விசாரணையில் அந்த இருவரும் தேர்தல் அலுவலர்கள் என்பது தெரிய வந்துள்ளதாகவும், விசாரணையில் தவறு நடைபெற்று இருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


Post Top Ad