தபால் ஓட்டுப்பதிவு செய்யாதவர்களுக்கு 'சான்ஸே இல்லை!' மாவட்ட தேர்தல் அலுவலர் திட்டவட்டம் - Asiriyar.Net

Saturday, April 3, 2021

தபால் ஓட்டுப்பதிவு செய்யாதவர்களுக்கு 'சான்ஸே இல்லை!' மாவட்ட தேர்தல் அலுவலர் திட்டவட்டம்

 







''தபால் ஓட்டுப்பதிவு செய்யாத மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாது,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்; நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்களுக்கு, தபால் ஓட்டு வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. 



திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதித்து கண்காணிப்பில் இருப்பர் யாரும், தபால் ஓட்டு கோரவில்லை.மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர் என, 68 ஆயிரத்து, 482 வாக்காளர் கண்டறிந்து, அவர்களிடம் விருப்பம் கோரப்பட்டது. அவர்களில், சதவீதம் பேர், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்கவே விரும்பினர்.


மீதியுள்ள, 3,871 பேர் மட்டுமே தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்தனர். இரண்டு நாட்கள், தேர்தல் பணிக்குழு வீடு தேடிச்சென்று, தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர். 3,673 வாக்காளர், தபால் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்; 26 மாற்றுத்திறனாளிகள், 172 மூத்த வாக்காளர் என, 198 வாக்காளர் ஓட்டளிக்காமல், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.



தேர்தல் பணிக்குழு சென்ற போது, 'குடிபெயர்ந்தது, ஊருக்கு சென்றது, இறப்பு' ஆகிய காரணங்களால், 198 ஓட்டுக்கள் பதிவாகவில்லை என, அதிகாரிகள் கூறுகின்றனர். தேர்தல் கமிஷன், 5ம் தேதி வரை, தபால் ஓட்டுப்பதிவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாக, தகவல் வெளியானதால், விடுபட்டவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்தது.



இரண்டு முறை சென்று வந்த பின்னரும், விடுபட்ட வாக்காளர், மீண்டும் வாய்ப்பளிக்க இயலாது. ஓட்டுச்சாவடிக்கு சென்றும் ஓட்டளிக்க இயலாது என, மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.



இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் விஜய கார்த்திகேயன் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளருக்கு தபால் ஓட்டு ஒதுக்கப்பட்ட போது, வாக்காளர் பட்டியில் உள்ள அவர்கள் பெயர், 'மார்க்கிங்' செய்யப்பட்டுள்ளது.அதற்கு பின்னரே, 'பேலட் ஷீட்' ஒதுக்கப்பட்டது. வீட்டுக்கு சென்றபோது ஓட்டளிக்காமல் விடுபட்டவர், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க இயலாது; இனிமேல் தபால் ஓட்டும் பதிவு செய்ய முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.







Post Top Ad