வீட்டிலிருந்து ₹16 லட்சம் வீசிய அரசு பள்ளி ஆசிரியர் “சஸ்பெண்ட்“ - சிஇஓ உத்தரவு - Asiriyar.Net

Sunday, April 4, 2021

வீட்டிலிருந்து ₹16 லட்சம் வீசிய அரசு பள்ளி ஆசிரியர் “சஸ்பெண்ட்“ - சிஇஓ உத்தரவு

 
விட்டிலிருந்து ₹16 லட்சம்‌ பணம்‌ வீசிய அரசு பள்ளி ஆசிரியர்‌ “சஸ்பெண்ட்‌: தேர்தல்‌ பறக்கும்‌ படை புகாரால்‌ சிஇஓ நடவடிக்கை 


16.20 லட்சம்‌ பணத்தை வீசியது தொடர்பாக, தேர்‌ தல்‌ பறக்கும்‌ படையினர்‌ புகாரால்‌, அரசு பள்ளி ஆசிரியரை சஸ்பெண்ட்‌ செய்து மாவட்ட முதன்‌ மைக்கல்வி அலுவலர்‌ அதிரடி நடவடிக்கை எடுத்‌ துள்ளார்‌. தர்மபுரி மாவட்டம்‌ அரூர்‌ திரு.வி.க நகறில்‌ வ௫ித்துவருபவர்‌குமார்‌(3) இவர்‌ மாம்பட்டி அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌ ஆசிரியராக பணியாற்றி வருவறார்‌. இந்நிலையில்‌ கடந்த 29ம்‌ தேதி காலை இவரது வீட்டில்‌, தேர்தல்‌ பறக்கும்‌ படையினர்‌ இடீர்‌ சோதனை நடத்தினர்‌. 


அப்போது வீட்டில்‌ இருந்த ₹16.20 லட்சம்‌ பணத்தை வீட்டில்‌ இருந்து ஆசிரியர்‌ குமார்‌ வெளியே தூக்கி வீசினார்‌. இதை அரியர்‌ குமாரின்‌ உறவினரும்‌, அரசு வக்கீலுமான பசுபதியின்‌ உதவி யாளர்‌ நேதாஜி என்பவர்‌ எடுத்தார்‌. அப்போது சுற்றி. வளைத்த போலீசார்‌ பணப்‌ பையை பறிமுதல்‌ செய்து, நேதாஜியை பிடித்து விசா ரித்தனர்‌. இதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம்‌. கொடுக்க பதுக்கி வைக்கப்‌: பட்டதா என்ற கோணத்தில்‌, தேர்தல்‌ நடத்தும்‌ அலு வலர்‌ விசாரணை நடத்தி வருறோர்‌.இ துதொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர்‌ குமார்‌, நேதாஜி, சரவணன்‌ ஆகியோர்‌ மீது போலீசார்‌ வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வரு இன்றனர்‌.இந்நிலையில்‌ ஆசிரியர்‌ குமார்‌ தேர்தல்‌ விதுமுறை மீறியதாக, தர்மபுரி மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்‌ ததோவுக்கு தகவல்‌ தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பணம்‌. பதுக்கல்‌ புகாரில்‌ சிக்கிய ஆசிரியர்‌ குமாரை சஸ்பெண்ட்‌ செய்து, மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்‌. கீதா நேற்று உத்தரவிட்டார்‌. தேர்தலில்‌ வாக்காளர்‌ களுக்கு பணம்‌ கொடுக்க பதுக்கிய ஆசிரியர்‌ சஸ் பெண்ட்‌ செய்யப்பட்டது, பள்ளிகல்வி வட்டாரத்தில்‌: பெரும்‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Post Top Ad