ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ரத்து! - Asiriyar.Net

Friday, April 9, 2021

ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ரத்து!

 
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டும் என்று ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி மாவட்ட அளவில் ஏப்ரல் 12ம் தேதி மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா பரவலை தடுக்க ஏப்ரல் 10 முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்த நிலையில்,  நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டது.  எனவே அதற்காக அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.Post Top Ad