Flash News : 9 மாவட்டங்கள் தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி - Asiriyar.Net

Friday, December 6, 2019

Flash News : 9 மாவட்டங்கள் தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி



உள்ளாட்சி தேர்தல்

9 மாவட்டங்கள் தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்த  உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோதுதிமுக தரப்பில் ஆஜரான அசோக் சிங்வி, புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை உள்ளிட்ட சட்டச் சிக்கல்களை நீக்காமல் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுக்கு முன் நடந்த வரையறையை தற்போது செய்து முடித்ததாக ஆணையம் அப்பட்டமாக பொய் சொல்கிறது என வாதிட்டார்.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின் தேர்தலை எந்த கோர்ட்டாலும் ரத்து செய்ய முடியாது என தமிழக அரசு வாதிட்டது. தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளிப்போட முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.



புதிய மாவட்டங்களில் மறுவரையறை செய்யாவிட்டால் குளறுபடிகள் ஏற்படாதா? பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் பழைய வரையறைதான் என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது? தேர்தல் அறிவிப்பில் சட்ட விதிகள் மீறப்பட்டதாக தெரிகிறதே? உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் புதிய மாவட்டங்கள் ஏன் தொடங்கப்பட்டது? என சரமாரியாக நீதிபதிகள் கேள்விகளை கேட்டனர்.
பின்னர் 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
திமுக தரப்பில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்துவதே சரியாக இருக்கும் என வாதிடப்பட்டது. இதையடுத்து 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்தலாமே என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். நேற்று மாலை தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


அதன்படி சற்றுமுன் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தனர். 9மாவட்டங்களில் அடுத்த 4 மாதங்களில் தொகுதி வரையறைகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்று அதில் உத்தரவிட்டுள்ளனர்.

Post Top Ad