பள்ளி மாணவர்களை பத்திரிகையாளராக்கும் போட்டி! - Asiriyar.Net

Friday, December 20, 2019

பள்ளி மாணவர்களை பத்திரிகையாளராக்கும் போட்டி!


பள்ளி மாணவர்களை பத்திரிகையாளராக்கும் போட்டி!


அன்புள்ள மாணவச் செல்வங்களுக்கு... உங்களுக்குள் பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம், உத்வேகம் இருக்கும். ஆனால், அதற்கான களம்தான் உங்களுக்கு அமைந்திருக்காது.

இதோ அதற்கான களத்தை உங்களின் அபிமான புதிய தலைமுறை கல்வி இதழ் ஏற்படுத்தித் தருகிறது.

ஆமாம் செல்லங்களே... உங்கள் ஆசிரியரை நீங்கள் பத்திரிகையாளராக இருந்து பேட்டி காணப் போகிறீர்கள். அந்த திறமை நிச்சயம் உங்களிடம் இருக்கும்.

உங்களுக்கு பிடித்த ஆசிரியரை பேட்டி கண்டு, அதை எழுதி எங்களுக்கு அனுப்ப வேண்டும். அந்த ஆசிரியர் கல்வி, சமூகப்பணி, மாணவர் மேம்பாடு, பள்ளி மேம்பாடு என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவராக இருக்க வேண்டும். 

யாரெல்லாம் பங்கு பெறலாம்

3-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பங்கு பெறலாம். இதற்கு ஆசிரியர்களும் உதவலாம். அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் பங்குகொள்ளலாம்.

எப்படி பேட்டி எடுக்க வேண்டும்? என்பதற்கு உதாரணம் வேண்டுமெனில் இந்த வார கல்வி இதழை வாங்கிப் பாருங்கள்.

வரும் வார கல்வி இதழிலும்... இது குறித்த பேட்டிக் கட்டுரை வெளியாக இருக்கிறது.

கடைசி தேதி என்பது இதற்கு கிடையாது. மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் தனது ஆசிரியர்களை பேட்டி கண்டு எங்களுக்கு, தபால் மூலம் எழுதி அனுப்பலாம். அதனுடன் மாணவர் மற்றும் ஆசிரியரின் நிழற்படமும் அனுப்பி வைக்கலாம். 

உங்களின் பேட்டிக் கட்டுரைகளுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெளிவாக படித்து புரிந்து கொள்ளவும்.

அனுப்ப வேண்டிய முகவரி

ஆச்சர்ய ஆசிரியர்,
புதிய தலைமுறை கல்வி,
தபால் பெட்டி எண் - 4990,
தி.நகர், சென்னை - 600017


-மோ.கணேசன், Chief Sub Editor, புதிய தலைமுறை கல்வி.

Post Top Ad