நெருங்கும் இறுதி காலக்கெடு...! பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி...? - Asiriyar.Net

Thursday, December 19, 2019

நெருங்கும் இறுதி காலக்கெடு...! பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி...?





ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கு வரும் 31-ம் தேதி கடைசி நாள் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.

வருமானவரி கணக்கு தாக்கல் மற்றும் பான் எண் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இந்த அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதன்படி, ஆதாருடன் பான் எண்ணை வரும் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே அதிகாரிகள் வட்டத்தில் கூறுகின்றனர்.

Post Top Ad