ரூ. 20 லட்சம் வரை ஆன்லைனில் கடன்.. ஐசிஐசிஐ வங்கியின் சூப்பரான திட்டம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 21, 2019

ரூ. 20 லட்சம் வரை ஆன்லைனில் கடன்.. ஐசிஐசிஐ வங்கியின் சூப்பரான திட்டம்!



ரூ. 20 லட்சம் வரை ஆன்லைனில் கடன்.. ஐசிஐசிஐ வங்கியின் சூப்பரான திட்டம்!


icici car loan : சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20 லட்சம் வரை கார் கடனை ஆன்லைனிலே பெற்றுக் கொள்ளும் வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ள்து. சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 100 சதவீதம் கார் கடனை இனி பெறும் திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி தற்போது நடைமுறையில் வைத்துள்ளது. தற்போதுள்ள வழிமுறைகளின் படி காருக்கான பகுதி தொகை (குறிப்பிட்ட தொகை) கடனாக வழங்கப்பட்டு வருகின்றது.



கார் வாங்குவதற்கான 100 சதவீத கடன் வழங்கும் திட்டம் ஐசிஐசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் வரை கடனாக பெற முடியும். இதன் மூலம் கார் சாலையில் இயங்கும் வரையிலான செலவு எவ்வளவு, அத்தனைக்கும் சேர்த்து கடனாக வழங்கப்படுகிறது. இந்த கடன் விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வாடிக்கையாளருக்கு கிடைத்துவிடும். விழாக்காலம் என்பதால் கார் வாங்க நினைப்போர் எளிதாக கார் வாங்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு அதிகமான வட்டியை பெற இந்த வங்கிக்கு செல்லவும். கடனை பெற ஐசிஐசிஐ வங்கிக்கு நேரிலோ அல்லது ஐசிஐசிஐ வங்கி கணக்கு வைத்துள்ளோர், அதில் பதிவு செய்துள்ள மொபைல் எண் மூலம் 5676766 எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 20 லட்சம் வரை ஆன்லைனில் கடன்.. ஐசிஐசிஐ வங்கியின் சூப்பரான திட்டம்!

Post Top Ad