உலக புத்தக நாள் விழாவில் அரசுப்பள்ளி ஆசிரியரின் நூல் வெளியீடு - Asiriyar.Net

Wednesday, April 24, 2019

உலக புத்தக நாள் விழாவில் அரசுப்பள்ளி ஆசிரியரின் நூல் வெளியீடு




சக்ஸஸ் அறக்கட்டளை மற்றும் கரூர் குரல் இணைந்து நடத்திய உலக புத்தக நாள் விழாவின் ஒருபகுதியாக ஆசிரியர் முனைவர் மணி. கணேசன் எழுதிய புதிய வசந்தத்தை நோக்கி... என்னும் கட்டுரைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்வி ஆர்வலர் ரோட்டரி பாஸ்கரன் தலைமையும் இனிய நந்தவனம் இதழாசிரியர் சந்திரசேகரன் முன்னிலையும் வகித்தனர். சக்ஸஸ் சந்துரு அனைவரையும் வரவேற்றார். அரசுப்பள்ளிக் குழந்தைகளின் ஆர்வலர் இளங்கோ கிருஷ்ணன் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட தயாரிப்பாளர் VK வெங்கடேசன்,  வதிலை எக்ஸ்பிரஸ் ரபீக் பாய், தொழிலதிபர் சாய்கணேசன், கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இயக்குநர் குமரவேல் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நூலாசிரியர் மணி.கணேசன் ஏற்புரை வழங்கினார். முடிவில் கரூர் குரல் இதழாசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.

Post Top Ad