ஒரு சாதாரண குடிமகளாக இருந்து எனக்கு நிறைய கேள்விகள் மரியாதைக்குரிய இயக்குநர் அவர்களுக்கு !! - Asiriyar.Net

Saturday, April 27, 2019

ஒரு சாதாரண குடிமகளாக இருந்து எனக்கு நிறைய கேள்விகள் மரியாதைக்குரிய இயக்குநர் அவர்களுக்கு !!





இன்றைய இந்து தமிழ் நாளிதழில் தாங்கள் #முதன்மைக்_கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை பற்றி செய்தி வெளிவந்துள்ளது .

ஏற்கனவே ஆங்காங்கே அரசுப் பள்ளிகளுக்கு முன்னால் மாணவர்கள் உதவி செய்வதும் , தொழிற்சாலை நிறுவனங்கள் தங்களுக்கு  அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி வருவதும் நடந்து வருகிறது. 

ஆனால் கல்விச் சீர் என்று நீங்கள் செயல்முறைகள் போட்டது போல இப்போது தனியாரையும் அரசுப் பள்ளிகளுக்கு தத்தெடுக்க செயல்முறைகள் போட்டுள்ளதில் சில நன்மைகளும் உண்டு  என்ற போதிலும் பல சிக்கல்கள் உருவாகும் ஐயா .

தலைமை ஆசிரியர்கள் ஏற்கனவே கையேந்தி பிச்சை எடுக்கும் நிலையில் தான் இது போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர். ஆனால் இது உரிமத்துடன் கையேந்த வைக்கும் நிலை ஆகிடுமே ...

தனியார் துறைகள்  NGO க்கள் எல்லோரும் அறத்துடனா செயல்பட்டுக் கொண்டுள்ளனர். அறமற்றவருக்கான புகலிடமாக சில அரசுப் பள்ளிகள் ஆகி விட இந்த செயல்முறைகள் காரணங்களாகி விடப் போகிறது. அரசு தான் சொல்லி விட்டதே , என தைரியமாக பலம் காமிக்கும் நாடகமெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கே , எளிய தலைமை ஆசிரியர்கள் இதை எல்லாம் தாங்கும் மனவலிமை பெறாமல்  மன அழுத்தம் பெறுவார்களே .... என்ன செய்வது ?

SSA வும் RMSA உம் சமஷ்ர அபியானாகியும்  , நபார்டு வங்கி என எல்லாமும் இருந்தும் அரசுப் பள்ளிகளுக்கு  எல்லாம்  ஏன் இவர்களிடம் கையேந்த வேண்டும் ?

நாட்டின் #வருவாய்
46518.77 கோடி எனில் , 

அனைத்து குழந்தைகளும் சமமான கல்வி பெறுவதற்குத் தேவையான நிதி ஒக்க்கப் பட வேண்டுமல்லவா ? நாட்டு வருமானத்தில் (GDP) குறைந்த பட்சம் 6% நிதி கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று 1960 களிலேயே நிர்ணயிக்கப்பட... 

ஏன் இத்தனை ஆண்டுகள் ஆகியும் செயலுக்கு வரவில்லை. ? அது பற்றி நீங்களாவது அரசிடம் கேட்கலாமே .. தங்கள் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பயிலும்  லட்சக்கணக்கான எளிய ஏழைக் குழந்தைகளுக்காக ... நிச்சயம் கேளுங்கள் ஐயா ..

 நம்மைப் போன்ற வளமான நாடாக இல்லாமல் இருந்தும் க்யூபா தனது நாட்டு கல்விக்கு  17.8% விழுக்காட்டை மக்களின் கல்விக்காக செலவழிக்கும் போது ...

தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் ( Economy of TamilNadu) சேவைத் துறை 45%, தொழில் துறை 34%, விவசாயம் 21% பங்களிக்கின்றன. தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் (2013–14) இந்தியாவின் மாநிலங்களில் #நான்காவது_பெரிய_பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. 

#ரகுராம்_ராஜன்_அறிக்கையின் படி,

 தமிழ்நாடு 

 #மூன்றாவது_முன்னேறிய_மாநிலம், தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு எனில்

 ஏன் நம்மால் செலவிட முடியவில்லை என்று  நம்மால் கேள்வி எழுப்ப முடியவில்லை ,

அறிவார்ந்த ஆசிரியர் சமூகமே ..
#பொருளாதாரம் கற்பிக்கும் பேராசிரியர்களே ,

மேல்நிலை வகுப்புகளுக்கு பொருளாதாரம் கற்பிக்கும் ஆசிரியர்களே ....

யோசியுங்கள் .

நீங்கள் குறிப்பிட்டுள்ள படி 
பள்ளிக் கல்வித் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 28,757.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது... எனில் இந்த ஒதுக்கீட்டில் எல்லாப் பள்ளிகளின் தேவைகளையும்  தன்னிறைவு செய்ய இயலாதா ?

மேலும் ... NGO ஆகட்டும் , தனியார் தொழில் நிறுவனங்களாகட்டும் தங்கள் வருமானத்தில்  கணக்கு காட்டவே 
கல்விக்கு செலவிடுவதைப் பயன்படுத்திக் கொள்வார்கள்  என்பது தானே உண்மை ? அதை நேரடியாக வருமான வரித்துறைக்கு கட்டி விட்டு , அரசே இதை செய்தால் என்ன ?

மீண்டும் கேட்கிறேன் ... புரியாமல் தான் கேட்கிறேன் ஒரு சாதாரண குடிமகளாக ...

எல்லோரும் பதில் சொல்லலாம் ..

உமா

Post Top Ad