TET - தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை! (Full Details) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 28, 2019

TET - தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை! (Full Details)




ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேருக்கு சம்பளம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது, 2010-ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசு அறிவித்திருந்தது.


இதற்கான அவகாசம் 2015 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், 2019 மார்ச் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மார்ச் 2019 வரை அவகாசத்தை நீட்டித்தும், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால், அவர்களின் சம்பளத்தை நிறுத்தம் செய்து, தமிழக பள்ளிக்கல்வித் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.




ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது*

*மத்திய அரசு 2009-ம் ஆண்டு அனைவருக்கும் கட்டாய கல்விச் சட்டத்தைக் கொண்டுவந்தது*

*அந்த சட்டத்தின் ஒரு அம்சமாக, 2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்பதை கட்டாயப்படுத்தியது*

*அதன்அடிப்படையில் 2012-ம் ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் தேர்ச்சியடையாத ஆசிரியர்களுக்கு, மேலும் 4 ஆண்டுக்கள் ஆசிரியர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது*

*மேலும், 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு, தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது*

*இந்தநிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது*

*இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இந்தச் செயலுக்கு ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது*

Post Top Ad