அரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்கியதில் முறைகேடு விசாரிக்க கோரி மனு; ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 27, 2019

அரசு பள்ளிகளில் 2018-19ல் புத்தகம், பொருட்கள் வாங்கியதில் முறைகேடு விசாரிக்க கோரி மனு; ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி!!




*மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு*


 *தமிழகம் முழுவதும் சுமார் 6,362 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் பொருளாதாரரீதியாக பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பயில்கின்றனர்*


 *ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆய்வகப்பொருட்கள் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கென மத்திய அரசு தொகையை ஒதுக்குகிறது*


*ஆய்வு பொருட்களுக்கு என பள்ளி ஒன்றுக்கு ரூ.45 ஆயிரம், நூலகத்திற்கு புத்தகங்களை வாங்குவதற்கென ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த தொகை முறையாக செலவிடப்படுவதில்லை*


*இதற்கான டெண்டர் வெளிப்படையாக நடைபெறுவதில்லை. தரம் குறைந்த ஆய்வகப்பொருட்கள் மற்றும் புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. இதில் பெரும் முறைகேடு நடைபெறுகிறது. அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர்*


*எனவே, தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2018-19ல் வாங்கப்பட்ட ஆய்வகப்பொருட்கள் மற்றும் நூலக புத்தகங்களின் தரம்குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க தமிழக பள்ளி கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும்*


*இனிவரும் கல்வியாண்டுகளில் ஆய்வகப்பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவது தொடர்பாக வெளிப்படையான டெண்டர் முறையை பின்பற்றவும் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்*




*இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்து, நீதிபதிகள், “இதனை பொதுநல வழக்காக தொடர முடியாது” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.




Post Top Ad