முகத்தை அழகாகவும் பளபளக்கவும் வைத்திருக்க உதவும் மருத்துவ குறிப்புகள்...! - Asiriyar.Net

Wednesday, April 7, 2021

முகத்தை அழகாகவும் பளபளக்கவும் வைத்திருக்க உதவும் மருத்துவ குறிப்புகள்...!
✹ காலையில் எழுந்தததும் 1 கிளாஸ் தண்ணீரை குடியுங்கள். உங்களின் நாளை இப்படி தொடங்கினால் மனதிற்கும் உடலிற்கும் அதிக ஆற்றல்  கிடைக்கும்.✹ காலை உணவை தவிர்காமல், அத்துடன் வைட்டமின் பி நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டால் உங்களின் உடல் ஆரோக்கியம் மற்றும்  முக ஆரோக்கியம் கூடும்.


✹ தினமும் 2 நிமிடம் கையை வைத்து முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் கொடுங்கள். இது முகத்தில் சீரான ரத்த ஓட்டத்தை தந்து பளபளவென மாற்றும். மேலும், ஐஸ் கட்டிகளை வைத்தும் முகத்தில் ஒத்தடம் கொடுப்பதால் திறந்த நிலையில் உள்ள முக துவாரங்கள் மூடி, நல்ல பலன்  விரைவிலே கிடைக்கும்.
✹ கண்கள் அதிக வீக்கத்துடன் காலையில் இருந்தால் அதற்கும் தீர்வு உள்ளது. டீ பைகளை குளிர வைத்த பின்னர் கண் பகுதியில் ஒத்தடம்  கொடுக்கலாம். இது கண்களின் வீக்கத்தை குறைத்து அதன் அழுத்தத்தையும் குறைத்து விடும்.


✹ முகத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்து கொள்ள பன்னீரை கொஞ்சம் பஞ்சில் ஊற்றி கொண்டு முகத்தில் தடவலாம். இந்த குறிப்பு உங்களின் வறட்சியான முகத்தை ஈர்ப்பதுடன் வைத்து கொள்ள உதவும். 


✹ முகத்தை அழகாக்க வேண்டும் என்பதற்காக கண்ட கிரீம்களையும் முகத்தில் பயன்படுத்தாதீர்கள். இது முகத்தின் அழகை கெடுத்து  கருமையை தந்து விடும். கூடுதலாக அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது

Post Top Ad