குடியரசு தின விழா நாளில் பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் ஜன.,26ல் குடியரசு தினவிழா நாளில் பள்ளிகளில் கூட்டம் நடத்த வேண்டும். இதே போல் ஆக.,15, நவ. 14., தேதிகளில் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் மாணவர்கள், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்கள் கற்றல் அடைவு, தனித்திறமையை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் விவாதிக்க வேண்டும். மேலும் தேர்ச்சி விகிதத்தில் குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மேற்கொள்ள வேண்டும். இக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநில பெற்றோர் -ஆசிரியர் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் ரமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.