ஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி - அமைச்சர் ஜெயக்குமார் - Asiriyar.Net

Monday, January 28, 2019

ஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி - அமைச்சர் ஜெயக்குமார்




ஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை ஆசிரியர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அரசு வருவாயில் 71 சதவீத பணம் அரசு ஊழியர்களின் சம்பளம், மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்கு செலவாகிறது என்று தெரிவித்த அவர், 29 சதவீத தொகை தான் மக்கள் நல திட்டங்களுக்கு செலவிடப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அச்சுறுத்த நாங்கள் என்ன பங்கரவாதிகளா? என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், போராடும் அரசு ஊழியர்களை அரசு அச்சுறுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.


ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad