ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் - போராட்டத்துக்கு சென்றவர்கள் வழியிலேயே மடக்கி கைது - Asiriyar.Net

Monday, January 28, 2019

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் - போராட்டத்துக்கு சென்றவர்கள் வழியிலேயே மடக்கி கைது





9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை எல்லையிலேயே தடுத்து போலீசார் கைது செய்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர்.


ஈரோட்டில் மறியல் போராட்டத்திற்கு வரும் அரசு ஊழியர் ஆசிரியர்களை தடுத்து நிறுத்தி அங்கங்கே போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 200 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் நான்குமுனை சந்திப்பில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 2,000 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post Top Ad