மேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி - Asiriyar.Net

Tuesday, January 29, 2019

மேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி






பணிக்கு திரும்புவதற்காக ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு நிறைவடைந்ததையொட்டி மேலும் 600 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்குப் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிக்கை வெளிடப்பட்டுள்ளது. அதில் இன்று காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள், காலிப்பணியிடங்களாக கருதப்பட்டும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் 95% மேனிலைப் பள்ளி ஆசிரியர்களும் 70% தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு நேற்று ரிமாண்டில் வைக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ய முடிவு எடுக்கபட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


மேலும் காலியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும்  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 400க்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 600 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad