இன்று 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்துறை இயக்குநர் தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 30, 2019

இன்று 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்துறை இயக்குநர் தகவல்


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 99% பேர் இன்று பணிக்கு திரும்பியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பியுள்ளதாகவும், நேற்று 97% பேர் வேலைக்கு திரும்பிய நிலையில் இன்று 99% ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கிவிட்டன.

தினந்தோறும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம் வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பாவிட்டால் அப்பணியிடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தற்போது வரை பள்ளிக்கு திரும்பாத தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய ஆசிரியர்களை தங்களுடைய பள்ளிக்கு மீண்டும் திரும்ப தகவல் தெரிவித்ததாகவும், எனவே அவர்கள் வரக்கூடிய நிலையில் இருந்தால் தொலைபேசி மூலமாகவும், குறுந்தகவல் மூலமாகவும் உறுதிப்படுத்தலாம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதே நேரத்தில் பள்ளிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விருப்பம் இருக்க கூடிய ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் தங்களுடைய பள்ளிக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 400 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 602 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நேற்று 97% பேர் வேலைக்கு திரும்பிய நிலையில் இன்று உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 99% பேர் இன்று பணிக்கு திரும்பினர் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Post Top Ad