சிறை ஆசிரியர் அனுபவம் - Asiriyar.Net

Thursday, January 31, 2019

சிறை ஆசிரியர் அனுபவம்



18 ஆண்டு ஆசிரியராக பணியாற்றிய நான் 29.1.19 கடலூர் மத்திய சிறையில் கைதியாக இருந்தேன்.அதுவும் கொலை,கற்பழிப்பு,கஞ்சா,சாராயம் விற்றவர்கள்,என பல்வேறு வழக்குகளில் கைதாகி பாற்பதற்கே பயமாக இருந்த சிறைக் கைதிகளுடன் ஒரே அறையில் 60 கைதிகளுடன் 9 ஆசிரியர்கள் திறந்த கழிப்பறையின் ஓரமாக கூனிகுருகி உட்கார்ந்து கொண்டே இரவைக் கழித்தோம்.

விடியலை தேடினோம்,விடியும் வேலையில் நடந்த கொடுமை தாங்க முடியாதவை. அனைத்து கைதிகளும் உள்ளேயே பீடி குடிக்க ஆரம்பித்து விட்டனர்,அந்த அறையில்  மாட்டிய என் ஆசிரிய பெருமக்களுக்கு ஒருவருக்கு கூட புகை பழக்கம் இல்லை.

அந்த புகை மண்டலத்தில் மூக்கை பிடித்துகொண்டு கைதிகலாய் காலத்தை கழித்தோம்.கைதிகளில் ஒருவன் ஏய் 4பேரா வரிசையாக உட்காறு என மிரட்டினான்.நீ வாத்தியாரா இருந்தா அங்க,இங்க நாங்க சொல்ரதான் கேட்கனும் என மிரட்டினான்.அந்த குரு சொல்வதை கேட்டோம். விடிந்ததும் சிறை கதவை திறந்து விட்டனர்.காலை உணவை சாப்பிட்ட நாங்கள் சிறைக்காவலர்கள் யாராவது வந்தால் சார் ஜேக்டோ-ஜீயோ போராட்டம் எப்படி சார் நடக்குது.நல்ல கூட்டம் வந்துள்ளதா என ஒவ்வோறு முறையும் ஒடி கேட்போம் சிறு குழந்தையாக, ஆனால் சிறைக்காவலர்களோ நாங்களும் வெளியில் செல்லவில்லை. போராட்டம் எப்படி நடக்கிறது என்று தெறியவில்லை என்ற பதிலைதான் ஒவ்வோறுமுறையும் கூறினார்கள்.

மணி பார்க்க கூட வழியில்லை.அங்கு தான் முன்னோர்கள் பார்த்தார்களே சூரியன் இருக்கும் இடத்தை வைத்து மணியை தோராயமாக தெரிந்து கொண்டோம். முச்சுக்கு 300 தடவை செல்போனை எடுத்து நாட்டுநடப்பை அறிந்தவர்கள் வேறு உலகத்தில் இருப்பது போல் இருந்தோம். வெளியில்  என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியாமல் எங்களுக்குள் பேசிக்கொண்டு சிறித்துகொண்டு நாம் நமக்காக சிறைக்கு வரவில்லை.

பல ஆயிரம் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்காகக சிறைக்கு வந்துள்ளோம் என்று வீர வசனம் பேசிக்கொண்டிருந்த எங்களுக்கு மத்திய சிறையில் இருந்து வெளியில் வந்த பின்தான் தெரிகிறது போராட்டம் பிசு பிசுத்தது என்று.         நாங்கள் நினைத்தோம் பல ஆயிரம் ஆசிரியர்களுக்காக நாம் சிறை சென்றோம் என்று.ஆனால் நமது ஆசிரிய பெருமக்களோ நம் வேலை போகிவிடும் என்று எங்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட என்னிப்பார்காமல் பள்ளி சென்றனர்.

இந்த வலியானது சிறையில் பட்ட வேதனையை விட கொடுமையாக உள்ளது.ஜேக்டோ ஜீயோ பொருப்பாளர்களே இந்த நிகழ்வை பார்க்கவா எங்களை ஜாமினில் எடுத்திர்கள்.எங்களை வெளியில்  எடுக்காமல் இருந்தால் வெளியில் போராட்டம் பெரிய அளவில் நடக்கிறது என்ற மாயதோற்றத்தில் மகிழ்வுடன் இருந்திருப்போமே. வாழ்க அரசு ஊழியர் ஆசிரியர் ஒற்றுமை.

சிறை ஆசிரியர் அனுபவம்

Post Top Ad