புது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு மீது ஹைகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் விமர்சனம் - Asiriyar.Net

Monday, January 28, 2019

புது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு மீது ஹைகோர்ட் கிளை நீதிபதிகள் கடும் விமர்சனம்




ஜாக்டோ ஜியோ தொடர்பான வழக்கு விசாரணையில் ஆசிரியர் சங்கங்களுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இன்று 7-ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதனிடையே ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்தும் பணிக்கு திரும்பாததால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்து அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது.
அப்போது தமிழக அரசு மீது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சரமாரி புகார்களை அளித்தனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது பொய் வழக்குகளை தமிழக அரசு போட்டு கைது செய்கிறது என்று ஜாக்டோ ஜியோ சார்பில் கூறப்பட்டது.


இந்த நிலையில் நீதிபதிகள் கூறுகையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடம் அரசு ஏன் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது? தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் புது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.
தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களும் பணி நிரந்தரம் கோரி போராடுவர், வழக்கு தொடருவர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Post Top Ad