நீதிமன்றம் - ஜாக்டோ ஜியோ சார்பாக கருத்து கூற விரும்பவில்லை.
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை அழைத்து ஏன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் புது பிரச்சனையை அரசு உருவாக்குகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரும் வழக்கில் அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசின் நிதிநிலைமை தொடர்பான விசயங்களில் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரும் வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும். என்றும் உயர் நீதிமன்ற கிளை கூறியது.
கோரிக்கைகள் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது
என்றும் கூறியுள்ளனர்.
வழக்கு விசாரணையை பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை.