எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் பதில்! - Asiriyar.Net

Wednesday, January 16, 2019

எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் பதில்!





கோபி அருகே காசிபாளையத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:



புதிதாக துவங்க உள்ள எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என சங்கங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆனால், பல பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுவதைவிட, ஆங்கில வழி கல்விக்கு மாற்றும் போது, ஆசிரியர்கள் அதே இடத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இதை மனதில் கொண்டு ஆசிரியர்கள் மனிதநேயத்தோடு பணியாற்ற வேண்டும்.

Post Top Ad