பிரதமருடன் மாணவர்கள் உரையாட 'ஆன்லைன்' பதிவுக்கு நாளை கடைசி - Asiriyar.Net

Tuesday, January 15, 2019

பிரதமருடன் மாணவர்கள் உரையாட 'ஆன்லைன்' பதிவுக்கு நாளை கடைசி





பொது தேர்வுக்கான, பிரதமரின் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள், ஆன்லைனில் பதிவு செய்வதற்கு, நாளை கடைசி நாள்.பொது தேர்வு எழுதும் மாணவர்களின் அச்சத்தை போக்கி, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.இந்தாண்டுக்கான நிகழ்ச்சி, வரும், 29ம் தேதி, டில்லியில் நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என, 200 பேர் பங்கேற்கலாம். இவர்கள், பிரதமருடன் உரையாட வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இந்த முறை, பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்க, மாணவர்களிடம் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான ஆன்லைனில், மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.இந்த பதிவு, ஜன., 7ல் துவங்கி, நாளையுடன் முடிகிறது. இதன் விபரங்களை,www.mygov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

Post Top Ad