பிளாஸ்டிக் தவிர்ப்போம்; அரசுப்பள்ளி குழந்தைகள் உறுதி - Asiriyar.Net

Friday, January 4, 2019

பிளாஸ்டிக் தவிர்ப்போம்; அரசுப்பள்ளி குழந்தைகள் உறுதி






"பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம்,' என்று வேலூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்தில் உள்ள தோரணம்பதி தொடக்கப் பள்ளி குழந்தைகள் உறுதியேற்றனர்.

"எனது பள்ளி பிளாஸ்டிக் கழிவு இல்லா பள்ளி' என்ற திட்டம், பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், இப்பள்ளியில், உறுதியேற்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளி குழந்தைகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர் சரவணன், "பிளாஸ்டிக் பொருட்களை பள்ளியிலும், வீட்டிலும் பயன்படுத்த மாட்டோம்; பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பணி மேற்கொள்வோம்' என்று உறுதி ஏற்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், சூடான பொருட்களுக்கு பயன்படுத்தினால் ஏற்படும் உடல் நலக்கேடு, மரங்கள் நட்டு பராமரிப்பதன் அவசியம் குறித்தும், இந்நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது.

இப்பள்ளி குழந்தைகள், தண்ணீர் பாட்டில், தட்டு, டம்ளர், டிபன் பாக்ஸ் என எதிலும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல், சில்வர் பாத்திரங்களை பயன்படுத்துவது, மற்றொரு சிறப்பம்சமாகும்.

பள்ளி சார்பில், மாணவர்களுக்கும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கும் துணி பை வழங்கப்பட்டது.

Post Top Ad