9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - Asiriyar.Net

Sunday, January 6, 2019

9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்


மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது போல வரும் காலங்களில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்குவது போன்று 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா லேப்டாப் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி வருகிறோம். 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் லேப்டாப் வழங்கப்படும்" என்றார்.


மேலும் வருகிற ஜனவரி 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு. கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Post Top Ad