பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து - Video - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, March 12, 2023

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து - Video

 



“ஒரு டென்ஷனும் வேண்டாம்” - பொதுத்தேர்வு எழுதும் +2 மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!


நாளை 12ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் நீங்கள் படிக்கும் புத்தகத்திலிருந்து தான் கேள்வி வரப்போகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கையும் மனவுறுதியும் தான் தேவை. அது இருந்தாலே நீங்கள் பாதி வெற்றி பெற்றதாகும்.


தேர்வு என்பது உங்களை பரிசோதிக்க அல்ல. உங்களை உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தான். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள். தேர்வை கண்டு பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். முதல்வராக இல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக வாழ்த்தி உங்கள் வெற்றிக்காக் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது


Click Here to Download - CHIEF MINISTER TWITTER



Post Top Ad