16 மாவட்டங்களுக்கு "RED ALERT" - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 18, 2021

16 மாவட்டங்களுக்கு "RED ALERT"

 
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை , திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல்லில் மிக கன மழை பெய்யக்கூடும்.


 திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரி, காரைக்காலில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபிரி, ஈரோட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சேலம், திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.


நாளை சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, குமரி  மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பெரும்பாலான இடங்களில் மிதடமான மழை பெய்யும். நவ. 20-ல் கிருஷ்ணகிரி, தருமபரி, திருப்பத்தூர்., ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Post Top Ad