' கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே ' - ஏன் தலையில் கை வைக்காதே என்று சொல்லி இருக்கலாமே? - என்ன காரணம்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 20, 2021

' கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே ' - ஏன் தலையில் கை வைக்காதே என்று சொல்லி இருக்கலாமே? - என்ன காரணம்?

 



' கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே '

என்று ஒரு பழமொழி சொல்கிறார்கள்... ஏன் தலையில் கை வைக்காதே என்று சொல்லி இருக்கலாமே. ' கன்னம்' என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு என்ன காரணம்?



'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்று சொல்வார்கள் . அந்தக் காலத்தில் பணம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வெளி நாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்து சம்பாதித்து பொருளை கொண்டு வருவார்கள்.


கப்பல் பயணத்தில் கப்பல் மூழ்கி, பொருள் மொத்தத்தையும் இழந்து, ஒருவன் ஏழையாகி விடுவது என்பது அந்த காலத்தில் சாதாரணமாக இருந்தது.



அப்போது அவனைப் பார்க்கும் பெரியவர்கள் கப்பலே கவிழ்ந்து போனாலும் சரி' கன்னத்தில் கை வைக்காதே' என்று சொல்வார்கள்.

அது ஆறுதல் மொழி அல்ல.


அவர்கள் அப்படி சொன்ன கன்னம் என்பது நமது முகத்தில் இருக்கும் கன்னம் அல்ல.

அந்தக் காலத்தில் திருடர்கள் கன்னக்கோல் என்ற ஒரு ஆயுதத்தின் உதவியால் ஒரு வீட்டின் சுவற்றில் துளை போட்டு அதன் வழியே உள்ளே சென்று திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள் .






அதனைத் தான் நம் பெரியவர்கள் தொழிலில் எவ்வளவு பெரிய பொருள் இழப்பு நேரிட்டு ஒருவன் ஏழையானாலும் சரி,

அடுத்தவர்களின் பொருளை அவன் திருடிவிடக்கூடாது என்று சொல்வதற்காக

'கன்னக் கோல் என்ற ஆயுதத்தில் கை வைக்கக் கூடாது என்பதற்காக

சுருக்கமாக கன்னம் என்று சொல்லி வைத்தார்கள்.




Post Top Ad