ரயிலில் சாகசம் செய்த அரசுப்பள்ளி மாணவ, மாணவி - தெறிக்க விட்ட மாவட்ட SP - Video - Asiriyar.Net

Friday, November 26, 2021

ரயிலில் சாகசம் செய்த அரசுப்பள்ளி மாணவ, மாணவி - தெறிக்க விட்ட மாவட்ட SP - Video

 





சென்னையில் ஓடும் ரயிலில் ஆபத்தான வகையில் சாகசம் செய்த பள்ளி மாணவன் மற்றும் மாணவியை சிறப்பு காவல் ஆய்வாளர் நேரில் அழைத்து அறிவுரை வழங்கியுள்ளார்.


ரயில்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் ஓடும் ரயிலில் சாகசம் செய்வதாக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனால் சில சமயம் உயிரிழப்புகளும் ஏற்படும் நிலையில் மாணவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் சமீபத்தில் சென்னை அருகே கவரப்பட்டில் பள்ளி மாணவருடன் மாணவி ஒருவரும் சேர்ந்து ஓடும் மின்சார ரயிலில் ஆபத்தான சாகச செயல்களை மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் எஸ்.பி வருண் குமார் மாணவன் மற்றும் மாணவியையும், அவர்களது பெற்றோர்களையும் நேரில் அழைத்து அறிவுறை வழங்கியுள்ளார்.





இதுசம்மந்தமாக கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த சம்மந்தப்பட்ட அந்த மாணவர் மற்றும் மாணவியை அவர்களது பெற்றோர்களுடன் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது ஆபத்தான பயணம் பற்றி அறிவுரை வழங்கினார். மேலும், அவர்களின் எதிர்கால கனவு குறித்து கேட்கும் போது அந்த மாணவர் தான் ஒரு DSP ஆகப்போவதாகவும், அந்த மாணவி தான் ஒரு IPS அதிகாரியாகபோவதாகவும் தெரிவித்தனர். அந்த மாணவர்கள் வருங்காலத்தில் சிறப்பாக படிக்க ஆலோசனைகள்  வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Click Here For Video






No comments:

Post a Comment

Post Top Ad