தற்போது அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளும் நேரடி வகுப்புகளாக செயல்பட்டுவருவதால் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்து கீழ்காணும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டது,
- 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு அனைத்து மாணாக்கர்களும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற செய்ய தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில அளவில் வேலூர் மாவட்டம் முதல் மூன்று இடங்களில் இடம் பெறும் வகையில் பள்ளி மாணாக்கர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும், நடைபெறவுள்ள திருப்புதல் தேர்விற்கான கால அட்டவணை பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதனுடைய முதல் கட்டமாக வரும் வாரம் முதல் slip testக்கான வினாத்தாட்கள் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படும், இச்சிறுதேர்வுகளில் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற பயிற்சி அளித்தல் வேண்டும், NTSE, NMMS, Trust Exam போன்ற தேர்வுகளில் அனைத்து மாணவர்களை பங்கேற்க செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து மாணவர்கள் தேர்ச்சி அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்,
மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் அவர்கள் கூட்டத்தில் சிறுபான்மையினர் நல உதவி தொகை (Pre-matric மற்றும் Post-matric scholarship) இம்மாதம் 30.11.2021க்குள் பள்ளிகளில் முடிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது, - ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும் தங்கள் பள்ளியின் வளாகத்தை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் உள்ள கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்படவேண்டும். மாணாக்கர்களுக்கான நல்ல குடிநீர் வசதி உள்ளதா என உறுதிப்படுத்தப்படவேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தினை அணுகி சிறப்பாக செயல்பட தெரிவிக்கப்பட்டது,
மழைக்காலங்களில் பள்ளிக் கட்டிடங்களில் மேற்கூரைப் பகுதிகளை அவ்வப்போது பார்வையிட்டு தண்ணீர் தேங்காமல், கட்டிடம் பழுதடையாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கூரைகள் இல்லாமல் காணப்படும் கட்டிடங்கள் சார்ந்து உடனுக்குடன் முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்த வேண்டும்,
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் மாவட்ட ஆட்சியரால் பார்வையிடும்போது அப்பள்ளியில் அறிவியல் ஆய்வகங்கள் பராமரிப்பு இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டது. எனவே அனைத்து பள்ளிகளிலும் உள்ள அறிவியல் ஆய்வகங்கள் உட்பட அனைத்து ஆய்வகங்களும் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் சரிசெய்யப்படவேண்டும், மாணாக்கர் நலன் மிகவும் முக்கியம் என கருதி, பள்ளி துவங்கும் முன்பு மாணாக்கர்கள் பள்ளிக்கு வருகை தருவதிலும், பள்ளி வேலை நேரம் முடியும் வரை பள்ளியை விட்டு வெளியில் செல்லாதவாறும், பாதுகாப்பான சூழலில் மாணாக்கர்கள் கல்வி கற்பதிலும் ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிக்கப்படவேண்டும். மேலும், மாணவ மாணவியர்கள் வழிதவறி போகாதவாறு அவர்களை செம்மைப்படுத்தி நெறிப்படுத்த வேண்டும். மாணாக்கர் தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதாக காணப்பட்டால் உடனடியாக மாணாக்கர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களை நல்வழிப்படுத்தி நெறி தவறாமல் நடக்க ஆசிரியர்கள் வழிவகை செய்ய வேண்டும். மாணாக்கர்களுக்கு ஒழுக்க கல்வி கற்பிக்க கால அட்டவணை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும், மாணவ மாணவியர்களிடையே குழந்தை திருமணம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.
அவ்வாறு குழந்தை திருமணங்கள் நடைபெற்றிருந்தால் அவற்றை கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால், இந்த கல்வி ஆண்டில் நடத்தப்படவுள்ள அனைத்து பொதுத் தேர்வுகளிலும் மாணவர்கள் நன்மதிப்பெண் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
Click Here To Download - Collector, HM, BEO Meeting Minutes - Pdf
No comments:
Post a Comment