காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காஞ்சிபுரம் ஒன்றியத்தின், திருப்புட்குழியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் பல்திறன் வகுப்பினை (Smart Class) ஆய்வு செய்ய மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு நான் அழைப்பு விடுத்திருந்தேன். அதனடிப்படையில், நேற்று (23.11.2021) ஆய்விற்காக மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வந்திருந்தார். நானும், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.க.சுந்தர், எம்.எல்.ஏ. மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டோம்.
உடன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
அரசுப்பள்ளி பார்வையின் போது மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்
No comments:
Post a Comment