GPF Missing Credit 11547 சந்தா தாரர்களின்2015-16 ஆம் நிதியாண்டு முடிய 50549 missing Credit சந்தா தொகை விடுபட்டுள்ளது. உரிய நடவடிக்கைகளை DDO மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக்கல்வி ஆணையராக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்,
சென்னை -6 ந.க. எண். 001068/எச்/83/2021, நாr:18:11.2021
----- பொருள் - பள்ளிக் - பொது சேம நலநிதி கணக்கு எண் வைத்துள்ள
சந்தாதாரர்களின் கணக்கில் 2015-2016 ஆம் நிதி ஆண்டு முடிய கணக்கீட்டுத் தாளில் உள்ள விடுபட்ட தொகையினை (Missing Credit) சரி செய்யும் பொருட்டு உரிய விபரங்கள் மாநிலக் கணக்காயருக்கு அனுப்பக் கோருதல் - சார்ந்து. பார்வை - அரசு நேர்முகக் கடித ந.க.எண். 12801/GL11/2021-1, நாள்:
19.07.2021.
பார்வையில் காணும் அரசின் நேர்முகக் கடிதத்துடன் பெறப்பட்ட மாநிலக் கணக்காயர் அலுவலக கடிதத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பணியாளர்களில் பொது சேம நல நிதி கணக்கு எண் வைத்துள்ள 11547 சந்தாதாரர்களின் கணக்கீட்டுத் தாளில் (GPF Account Number) 2015-2016 ஆம் நிதி ஆண்டு முடிய 50549 சந்தா தொகைகள் விடுபட்டுள்ளது (Missing Credit) என்றும் விடுபட்டுள்ள தொகையினை சரி செய்யும் பொருட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நேர்வில் அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவாறு, அனைத்து பணப்பட்டுவாடா அலுவலர்களுக்கும் (DDO) பொது வைப்பு நிதி விடுபட்ட தொகையினை, அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்த உடனடியாக மாநிலக் கணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அதன் விவரத்தினை இவ்வாணையரகத்திற்கும் அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவ்விவரங்கள் அரசு மற்றும் மாநிலக் கணக்காயர் அலுவலகத்தால் கோரப்பட்டுள்ளதால் இதன் மீது தனிகவனம் செலுத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அதன் விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மீளவும் தெரிவிக்கப்படுகிறது.
/இது மிகவும் அவசரம்/
இணைப்பு: அரசு கடித நகல்,
நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர்
பெறுநர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
No comments:
Post a Comment