மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேற்று காலை கோவை உக்கடத்தில் உள்ள மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்றனர். அங்கு மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி னர். அதன்பின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: மாணவர்களுக்கு போக்சோ பற்றிய விழிப்புணர்வு தேவை. போக்சோ சம்பந்தமாக விழிப்புணர்வை அந்தந்த ஆசிரியர் மூலமாக ஒரு மணி நேரம் நடத்த வேண்டும் என்று கூறி உள்ளோம். இது போன்ற நிகழ்வு யாருக்கும் நடக்கக் கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தருவது எங்களது கடமை.
மாணவர்கள் தங்களது குறைகளை 14417 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பிரச்னை வெளியில் வந்த உடனே காவல் துறை துரிதமாக செயல்பட்டு விரைவாக குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment