போஸ்ட் ஆபீசில் சேமித்தே நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்! - Asiriyar.Net

Monday, November 15, 2021

போஸ்ட் ஆபீசில் சேமித்தே நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்!

 


உங்களை லட்சாதிபதி ஆக்கும் நான்கு சேமிப்புத் திட்டங்கள் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.


தபால் நிலைய சேமிப்பு!


பணத்தை வைத்து நம்மால் அனைத்தையும் வாங்கிவிட முடியாது; ஆனால், நமது சுகத்துக்கு பணம் மிக அவசியமான ஒன்றாகும். பணத்தைச் சம்பாதிப்பதை விட அதைச் சேமிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். நிகழ்காலத்தில் அனைத்தையும் செலவு செய்துவிட்டு எதிர்காலத்தில் அவசரத் தேவைக்கு ஒன்றும் இல்லாத நிலை ஏற்படாமல் இருக்க சேமிப்பு அவசியம். அதுவும் கொரோனா வந்த பிறகு சேமிப்பு மற்றும் அவசர காலத்துக்கான பணத் தேவை குறித்து பலர் புரிந்துகொண்டுள்ளனர். சேமிப்புத் திட்டங்கள் பல இருந்தாலும் அதில் பலர் கவனம் செலுத்துவதில்லை. இந்திய தபால் துறை சிறப்பான சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வங்கிகளுக்கு ஈடாக, தபால் நிலையங்களிலும் நிறைய சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இத்திட்டங்களில் நல்ல வட்டி லாபமும் கிடைக்கிறது.கிசான் விகாஸ் பத்ரா!


இந்திய தபால் துறை வாயிலாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களில் கிசான் விகாஸ் பத்திரத் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்துக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய நிதியமைச்சகம் நிர்ணயிக்கிறது. தற்போதைய நிலவரப்படி 6.9 சதவீத வட்டி நடைமுறையில் உள்ளது. இதன்படி பார்த்தால் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும். இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தது 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. நீங்கள் பத்திரம் வாங்கிய பின்னர் இரண்டரை ஆண்டுகள் கழித்து உங்களால் பணத்தை எடுக்க முடியும்.


ரெக்கரிங் டெபாசிட்!நல்ல லாபத்தை நோக்கி முதலீடு செய்பவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் நிலையான வட்டி வருமானம் கிடைப்பதோடு சேமிப்புப் பணமும் பாதுகாப்பாக இருக்கும். மாதத்துக்கு ரூ.10,000 வரையில் சேமித்து குறுகிய காலத்தில் லட்சாதிபதி ஆகமுடியும். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் நீங்கள் அடுத்த 5-5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் தினசரி 100 ரூபாய் சேமித்தால் கூட போதுமானது. இத்திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 5.8 சதவீத வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்தில் தினசரி ரூ.333 முதலீடு செய்தால் கூட இத்திட்டத்தின் முதிர்வு காலத்தில் உங்களுக்கு ரூ.16.28 லட்சம் கிடைக்கும்.


தேசிய சேமிப்புச் சான்றிதழ்!நிதி ரீதியாக நிலையான எதிர்காலத்தைப் பெறுவதற்கான சிறந்த சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகத் தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளது. இத்திட்டத்தில் 6.8 சதவீத வட்டியில் நீங்கள் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து சேமித்து வந்தால் இந்த இலக்கை நீங்கள் எளிதாக அடைய முடியும். நீங்கள் ஐந்து ஆண்டுகளில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் வட்டி வருமானமாக உங்களுக்கு ரூ.6 லட்சம் வரையில் கிடைக்கும். அதாவது இத்திட்டத்தின் கீழ் ஐந்தே ஆண்டுகளில் நீங்கள் ரூ.20.85 லட்சம் பெற முடியும். இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.


செல்வ மகள் சேமிப்புத் திட்டம்!பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக 'சுகன்யா சம்ரிதி யோஜனா' எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை இந்திய தபால் துறை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலர்களோ அஞ்சலகங்கள் அல்லது வங்கிகளில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்துக்கான வட்டி 7.6 சதவீதம் ஆகும். குறைந்தபட்சம் ரூ.250 முதல் நீங்கள் சேமிக்கலாம்.

Post Top Ad