TET - தகுதி தேர்வு முடிக்காத 1,747 ஆசிரியர்கள் யார்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 20, 2019

TET - தகுதி தேர்வு முடிக்காத 1,747 ஆசிரியர்கள் யார்?




ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத, 1,747 ஆசிரியர்களின் பட்டியலை, இன்று தாக்கல் செய்ய, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஆசிரியர் பணியில் சேர்வதற்கு, மாநில அல்லது மத்திய அரசுநடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற, 2016 நவம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகும், பல முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பணியாற்றும், 1,747 பேர், தகுதி தேர்வை முடிக்கவில்லை என, பள்ளிக் கல்வித் துறை கண்டுபிடித்தது. அவர்களின் பெயர் பட்டியலை, இன்று தாக்கல் செய்யும்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இந்த நடவடிக்கைக்கு, ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஆசிரியர்களின் பணிக்கு பாதிப்பில்லாத வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, பணியை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post Top Ad