சமூக வலைத்தளங்களில் வெளியான 10,+1,+2 வினாத்தாள்கள்! ஆசிரியர்கள் அதிர்ச்சி! - Asiriyar.Net

Post Top Ad

Friday, December 20, 2019

சமூக வலைத்தளங்களில் வெளியான 10,+1,+2 வினாத்தாள்கள்! ஆசிரியர்கள் அதிர்ச்சி!

10,11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் சமூகவலைதளங்களில் முன்கூட்டியே வெளியானதால் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் கடந்த 13ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுகளும் கடந்த 11ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.இந்நிலையில், சமூக வலைதளமான ஹலோ ஆப்பில் இத்தேர்வுகளின் வினாத்தாள்கள் முன்கூட்டியே பதிவேற்றம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. 10ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும் சூழலில், அறிவியல் தேர்வுக்கான வினாத்தாள் நேற்றைய தினமே வெளியானதால் கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே 12 மற்றும் 11ம் வகுப்புக்களுக்கான வேதியியல் தேர்வு வினாத்தாள், தேர்வுக்கு ஒரு நாள் முன்னரே வெளியாகியது.

பெரும்பாலான பள்ளிகளில் சமூகவலைதளங்களில் வெளியான வினாத்தாளைக் கொண்டே தேர்வுகள் நடைபெறுவதால், வினாத்தாளை பார்த்து படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்களையும், படிக்காத மாணவர்கள் குறைவான மதிப்பெண்களையும் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்வுக்குரிய வினாத்தாள்கள் எவ்வாறு சமூகவலைதளங்களில் முன்கூட்டியே வெளியானது? எந்த மாவட்டத்தில் இருந்து வெளியாகிறது? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று வினாத்தாள்களை முன்கூடியே வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Recommend For You

Post Top Ad