தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 3, 2019

தமிழகத்தில் 8,909 அரசு பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்கள்" - ஆய்வில் அதிர்ச்சி தகவல்


தமிழக அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையில்,   சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து  சமூக நலத்துறை ஆய்வு நடத்தியுள்ளது.ஆய்வின் முடிவில் 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில், இருபத்து ஐந்துக்கும் குறைவான மாணவர்களே படித்து வருவது தெரியவந்துள்ளது.

 குறைவான மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகள் அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில், முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 821 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள்  படித்து வருகின்றனர்.


இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் வேலூர் மாவட்டமும், மூன்றாவது இடத்தில் ராமநாதபுரம் மாவட்டமும் உள்ளன. சிவகங்கை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை மாவட்டங்கள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதி அமைந்துள்ள ஈரோடு மாவட்டம், எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 355 அரசு பள்ளிகள் குறைவான மாணவர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

சென்னையில், 55 பள்ளிகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர்.  இந்த முடிவுகள் அனைத்தும் 

Post Top Ad