ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணியமர்த்துவது குறித்து எவ்வித ஆணையையும் திமுக அரசு வெளியிடவில்லை.
மாறாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது. வாக்குறுதிக்கு முரணாக செயல்பட்டுவிட்டு, அதனைச் சாதனை என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்ற அரசுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment