9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி விதிகள் - Instructions - CEO Proceedings - Asiriyar.Net

Tuesday, May 9, 2023

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி விதிகள் - Instructions - CEO Proceedings

 
முக்கிய குறிப்புகள்:-


தேர்ச்சி பதிவேடு மற்றும் தேர்ச்சி பதிவுத் தாள் தயாரிக்கும் போது பின்பற்றப்படும் குறிப்புகள்

ஒருங்கிணைந்த மதிப்பெண் பதிவேடு

1) 6, 7 வகுப்புகளுக்கு தனியாகவும், 8, 9 வகுப்புகளுக்கு தனியாகவும் ஒருங்கிணைந்த மதிப்பேடு தயாரித்து ஒப்புதல் பெற வேண்டும். ( கடந்த ஆண்டுகளில் ஒரே பதிவேட்டில் மதிப்பெண் பதிவு மேற்கொண்டு ஒப்புதல் பெற்றிருந்தால் அப் பதிவேட்டில் தொடர் பதிவுகள் மேற்கொள்ளலாம் .) 


2) 6, 7 வகுப்புகளுக்கு CCA முறைப்படியும் 8, 9 வகுப்பகளுக்கு காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் தேர்ச்சி அளிக்க வேண்டும்.

3) ஒவ்வொரு வகுப்பு மற்றும் பிரிவுகள் வாரியாக மதிப்பெண்கள் பதிவு இடம் பெற வேண்டும்.


4) ஒவ்வொரு வகுப்பு மற்றும் பிரிவு மதிப்பெண்கள் பதிவிற்கு பின் வகுப்பு தேர்ச்சி சுருக்கம் (படிவம் -1) எழுதி அதன் கீழ் வகுப்பு ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர் கையொப்பம் இடம் பெற வேண்டும். அதன் கீழ் பள்ளி அளவில் சரிபார்ப்பு குழு சரி பார்த்து கையொப்பம் இட வேண்டும்.


5) ஒவ்வொரு வகுப்பு மற்றும் பிரிவிற்கும் மேற்குறிப்பிட்ட விவரங்கள் பதிவு முடிந்த பின் அடுத்த வகுப்பு மதிப்பெண் பதிவு அடுத்தப்பக்கத்தில் தொடர வேண்டும்.

6) மதிப்பெண் பதிவுகள் கையால் எழுதப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் Print Copy, Xerox Copy போன்றவை ஒட்டுதல் கூடாது.


7) அனைத்து வகுப்புகளுக்கும் வேண்டும். வகுப்பு தேர்ச்சி சுருக்கம் இடம் பெற

8) 8, 9 மதிப்பெண் பதிவேடு மற்றும் 6,7 வகுப்பு CCA பதிவேட்டில் வகுப்பு மற்றும் பதிவு முடிந்த மறு பக்கத்தில் பள்ளி அளவு தேர்ச்சி சுருக்கம் (படிவம் 2) இடம் பெற வேண்டும். தேர்ச்சி விதிகள் எழுதி சரிபார்ப்பு குழு கையொப்பம் இட வேண்டும். இதனை சரி பார்த்து உறுதிப்படுத்திய பின் பள்ளித் தலைமை ஆசிரியர் பள்ளி முத்திரையுடன் கையொப்பம் இட வேண்டும்.
9) மதிப்பெண் பதிவேட்டில் EMIS No, உடற்கல்வி மதிப்பெண், பள்ளி வேலை நாள்கள், ஒவ்வொரு மாணவனின் வருகை நாட்கள், வருகை சதவீதம் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளதை தலைமை ஆசிரியர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


10)EMIS -இல் உள்ள மாணாக்கர் எண்ணிக்கையில் மாணாக்கர் தேர்ச்சி பதிவேட்டில் பெயர் பதிவுகள் உள்ளதா என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.


11) "தேர்ச்சி என்று தமிழில் நீலநிறத்திலும், "தேர்ச்சி யின்மை" என்று தமிழில் சிகப்பு நிறத்திலும் பதிவுகள் செய்ய வேண்டும்.


12)மதிப்பெண் பதிவேட்டில் அடித்தல், திருத்தம் இல்லாமலும், தவறுகள் ஏற்பட்டால் ஒயிட்னர் போடுவதை முற்றிலும் தவித்து பிழையின்றி அழகாக பதிவுகள் செய்யவும். 13)மதிப்பெண் பதிவேடுகள் முறையாக Brown Sheet அட்டையுடன் பள்ளியின் பெயர் பதிக்கப்பட்டு எடுத்து வர வேண்டும். பள்ளியின் பெயர் அட்டையிலும், உள் பக்கத்திலும் எழுதப்படவோ/ print எடுத்துஒட்டவோ செய்ய வேண்டும். 14)கடந்த ஆண்டுகள் பயன்படுத்திய மதிப்பெண் பதிவேடுகளில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். பதிவேடு காலி ஆனால் மட்டுமே புதிய பதிவேட பயன்படுத்த வேண்டும்.


15)CCA மதிப்பெண் பதிவேட்டில் 2022-2023 கல்வியாண்டு முதல் பருவம், இரண்டாம் பருவம், மதிப்பெண்கள் பதிவு கட்டாயம் இடம் பெறவேண்டும். 


16)6 - 8 வகுப்பு வரை கல்வி உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் 100% தேர்ச்சி வழங்க வேண்டும். 


17)9 -ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்ச்சி வழங்க அரசு விதிகளின் படி குறைந்தது 75 % வருகைப்பதிவு இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 25 மதிப்பெண்கள் பெற்று, உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண் பெற வேண்டும். ஒவ்வொரு பாடத்திலேயும் 25 மதிப்பெண்-க்கு அதிகம் பெற்று , வருகை சதவீதம் 75% குறைவாக இருந்தால் மருத்துவ சான்றின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலரின் ஒப்புதலுடன் விதிகளுக்குட்பட்டு தேர்ச்சி வழங்கலாம்.
18)மதிப்பெண் பதிவு தாளில் ஒருப் பக்கம் மட்டுமே மதிப்பெண் பதிவு செய்யவும்.

19)மதிப்பெண் பதிவேடு மற்றும் இரு செட் மதிப்பெண் பதிவு தாள்களில் ஒரே மதிப்பெண் பதியப் பட்டுள்ளதை சரிபார்ப்புக்குழு தவறின்றி சரிபார்க்க வேண்டும். தலைமைஆசிரியர்கள் அதனை உறுதிப்படுத்தி கையொப்பம் இடவேண்டும்.


20)மதிப்பெண் பதிவு தாளிலும் மேற்கண்ட படி நிலைகளை பின்பற்றி தவறின்றி பதிவு செய்யவும்.

-

21)மதிப்பெண் பதிவேடு மற்றும் இரு செட் மதிப்பெண் பதிவு தாள்களில் மதிப்பெண்களை உறுதிப்படுத்தியபின் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் பள்ளித் தேர்ச்சி சான்று ( படிவம் 3 ) தெளிவாக பூர்த்திச் செய்து - கையொப்பம் போட வேண்டும். பதிவேடு சரிபார்ப்பு முடிந்தபின் சரிபார்ப்பு குழு படிவம் - 3 கொடுக்க வேண்டும்.


22) தேர்ச்சி பட்டியல் மற்றும் தேர்ச்சி பதிவேடு - மாவட்டக்கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்றப் பின் 11/05/2023 அன்று பள்ளி அளவு தேர்ச்சி அறிக்கையை வெளியிடவும் அறிவுறுத்தப்படுகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர், நாகர்கோவில்.Click Here to Download - 9th Results - Instructions - CEO Proceedings - PdfPost Top Ad