கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கார்குடி அரசுப் பள்ளியில் முதல்முறையாக பிளஸ்-2 தேர்வு எழுதிய 32 மாணவர்களில் 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 24 பேர் பழங்குடியின மாணவர்கள். 12ம் வகுப்புக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில் பத்தாம் வகுப்பு வரை படிப்பித்த ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியால் முதல்முறையாக பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதிய இந்த மாணவர்களில் அதிகபட்சம் தேர்ச்சி பெற்றது பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளது.
1954ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்ட இந்த பள்ளி படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களில் மாணவ மாணவிகளுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
ஏற்கனவே பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் தொடர்ந்து இதில் 11 மற்றும் 12ம் வகுப்பு வரை படித்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரிந்து வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், மற்றும் யானை பாகன்கள், உதவியாளர்களாக பணிபுரிந்து வருபவர்களின் குழந்தைகளை அதிக அளவில் இந்த பள்ளியில் படிக்கின்றனர்.
மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் அதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதத்தில் இரண்டு தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கு மூன்று மாதம் முன்பு பத்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த மாணவ மாணவிகளுக்கு பாடங்களை கற்பித்தனர்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நேற்று வெளியான நிலையில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் முதல் முறையாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி 33 மாணவர்களில் 31 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இதில் 24 பழங்குடியின மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது ஆசிரியர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உரிய ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியரின் விடாமுயற்சியால் தேர்ச்சி பெற்றதை கொண்டாடும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அனைத்து வகுப்புகளுக்கும் நிரந்தரமாக ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment