பிளஸ் 2 இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில், வினாத்தாள் 'லீக்' ஆனது குறித்து, அச்சகங்களில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு இன்று முடிகிறது. அதிகாரிகள் அதிர்ச்சிநேற்று நடந்த கணித பாடத்துக்கான திருப்புதல்தேர்வில், இரண்டு வகை வினாத்தாள்களும், சமூக வலைதளங்களில் முன்கூட்டியே வெளியாகின.முதல் கட்ட திருப்புதல் தேர்விலும், வினாத்தாள்கள் லீக் ஆகி பிரச்னை ஏற்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட தேர்விலும் லீக் ஆனதால், பள்ளிக் கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், வினாத்தாள் லீக் தொடர்பாக விசாரணை துவங்கியுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள அச்சகங்களில், வினாத்தாளை அச்சடித்துள்ளனர். அந்த அச்சகங்களில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், 'யு டியூபர்'கள் சிலர் வினாத்தாள்களை பெற்று, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
'இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்வு இன்று துவக்கம்பத்தாம் வகுப்புக்கு நேற்றுடன் இரண்டு கட்ட திருப்புதல் தேர்வுகள் முடிந்தன. பிளஸ் 2வுக்கு இன்றுடன் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு முடிகிறது.
இந்நிலையில், பிளஸ் 1 வகுப்புக்கான திருப்புதல் தேர்வு இன்று துவங்க உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு, எந்தவிதமான தேர்வும் நடத்தப்படாத நிலையில், முதல் தேர்வாக, இந்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. பொது தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் பொதுவான வினாத்தாளை பயன்படுத்தி, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment