அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான துறை தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வுகள், ஜூன் 6 முதல், 14 வரை கணினி வழியில் நடக்கின்றன. இதற்கான 'ஆன்லைன்' பதிவுகள் துவங்கிஉள்ளன. இந்த மாதம், 30ம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஊழியர்கள் தங்களின் 'ஆதார்' விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment