1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு இல்லை என்று ஏற்கெனவே பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் இறுதித் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான தேதிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
அதன்படி சென்னையில், உள்ள பள்ளிகளில் 6 - 9 வரையிலான வகுப்புகளுக்கு மே 5 முதல் 12 ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும்
6,7-ம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்தேர்வு, 8,9ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு நடைபெறுகிறது.
நடப்பு கல்வியாண்டில் இறுதி வேலை நாள் 13ஆம் தேதி. 2022-23ஆம் ஆண்டுகளுக்கான வகுப்புகள் ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment