பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி - Asiriyar.Net

Wednesday, April 27, 2022

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி

 





தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஆய்வில் கணக்கில் வராத சொத்துகளைக் கொண்டிருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும், பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்களின் சொத்துகளையும் ஆராய வேண்டும் எனவும் அதிகாரிகளின் ஊழல்களை வெளிக்கொண்டுவரும் சோதனையில் போதிய காவல்துறையினரை காவல்துறைத் தலைவர் ஒதுக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment

Post Top Ad