முதுகலை ஆசிரியர் தேர்வு: திருத்தப்பட்ட தேர்வு பட்டியல் ஆன்லைனில் வெளியீடு - Asiriyar.Net

Saturday, April 23, 2022

முதுகலை ஆசிரியர் தேர்வு: திருத்தப்பட்ட தேர்வு பட்டியல் ஆன்லைனில் வெளியீடு

 
கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வணிகவியல், வரலாறு பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


2018-2019-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் 2019-ம் ஆண்டு செப்.27 முதல் 29-ம் தேதி வரை கணினிவழி போட்டித் தேர்வை நடத்தியது. அதன் முடிவுகள் 2019 அக். 18 மற்றும் 21-ம் தேதி வெளியிடப்பட்டன.


இதைதொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு 2019 நவ. 8 மற்றும் 9-ம் தேதி நடத்தப்பட்டு, பாட வாரியாக தேர்வுபட்டியல் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவின்படி, வணிகவியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கு திருத்தப்பட்ட தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.
Post Top Ad