தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தேவையற்ற வதந்திகளோ அச்சுறுத்தலையோ ஏற்படுத்த வேண்டிய நேரமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொற்றுப் பரவல் விஷயத்தில் அச்சப்பட வேண்டிய இடத்தில் இல்லை. அக்கறைப்படவேண்டிய இடத்தில் உள்ளோம். ராதாகிருஷ்ணன் விளக்கம்
தமிழகத்தில் தற்போது 1000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தால் அதில் 3 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகும். எனவே, கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கரோனா உறுதியானதால் அங்கு மொத்த பாதிப்பு 111 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதால் 109 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment