9-ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயப் பாடம் - தமிழக அரசு - Asiriyar.Net

Tuesday, April 26, 2022

9-ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயப் பாடம் - தமிழக அரசு

 





தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் உடற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.


இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாவது:


தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்விப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, செய்முறை மற்றும் எழுத்து முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


அனைத்து பள்ளிகளில் இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad