School Morning Prayer Activities - 18.04.2022 - Asiriyar.Net

Monday, April 18, 2022

School Morning Prayer Activities - 18.04.2022

 
திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்: நட்பியல்


அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை


குறள்: 894

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்

காற்றாதார் இன்னா செயல்


பொருள்:

எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்


பழமொழி :

No man can serve two masters

ஆற்றிலே ஒருகால்; சேற்றிலே ஒரு கால் வைக்காதே. 


இரண்டொழுக்க பண்புகள் :

1.நன்மை எ‌ன்றாலு‌ம் தீமை என்றாலும் நான் எதை விதைப்பேனோ அதை அறுப்பேன். 


2. எனவே கீழ்படிதல், அமைதி, பொறுமை போன்ற நல் விதைகளை இம்மாணவ பருவத்தில் விதைக்க முயற்சிப்பேன் 


பொன்மொழி :

எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்.____ராமகிருஷ்ண பரமஹம்சர்


பொது அறிவு :


1. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை கூறும் அரசியல் பிரிவு எது?

 Article 14.


 2. மாநில அரசின் தலைவர் யார்? 

ஆளுநர்.


English words & meanings :

 igloo - an ice house made by the Inuit people of North America, வட அமெரிக்க இனியுட் மக்கள் கட்டும் பனி வீடு. 


Imply - to suggest something indirectly, குறிப்பாக உணர்த்துதல்


ஆரோக்ய வாழ்வு :


சப்போட்டா சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்த பிரச்சனையில் தீர்வு காணலாம். இந்த பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.சப்போட்டா சிறுநீரகம் தொடர்பான நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது. ஒருவருக்கு சிறுநீரக கல் இருந்தால், சப்போட்டா சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் சப்போட்டாவில் காணப்படுகின்றன, இது பல பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கும்.உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், எரிச்சல் மற்றும் கவனமின்மை ஆகியவற்றை சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்புச்சத்து சப்போட்டாவில் காணப்படுகிறது.


கணினி யுகம் :


Ctrl + Alt + V - Paste special. 

 Shift + Ctrl + 9 - Unhide row


ஏப்ரல் 14


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  அவர்களின் நினைவுநாள்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல் புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். குவாண்டம் எந்திரவியல்,சார்புக் கோட்பாடு இரண்டும் நவீன விஞ்ஞானத்தின் இரு தூண்களாக கருதப்படுகிறது.ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


நீதிக்கதை


மாம்பழத்தைச் சுவைத்த ஒரு சிறுவன் கொட்டையை மலையின் மீது வீசி எறிந்தான். 


மலையின் மீது விழுந்த மாங்கொட்டைக்குச் சரியான அடி.


"ஊ.. ஊ..!"- வலியால் துடித்து அழலாயிற்று. 


உறங்கிக் கொண்டிருந்த மலை இந்த சத்தத்தால் தூக்கம் கலைந்து எழுந்தது. 


மாங்கொட்டையை கண்டது.


"ஏய்! பொடிப்பயலே! இங்கே என்ன செய்கிறாய்? இடத்தை காலி பண்ணு சீக்கிரம்!"- அதட்டிவிட்டு உறங்க ஆரம்பித்தது.


அடிப்பட்ட மாங்கொட்டை மெல்ல எழுந்து நடந்தது. புகலிடம் தேடி மலை மீது அலைந்தது. 


இதைப் பார்த்துவிட்ட சூரியனுக்கு ஏக கோபம்.


தகதகக்கும் அனலுடன் உக்கிரமான கதிர்களைப் பாய்ச்சியது. 


அனல் தாளாமல் ஓரிடத்தில் ஒதுங்கிய மாங்கொட்டை, சூரியக்கதிர்களைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டது. 

பிறகு அங்கு வந்தது மேகக் கூட்டம்,

 மேகத்திற்கு பொல்லாத கோபம் வந்து சில நிமிடங்களில் மப்பும்-மந்தாரமுமாய் திரண்டு , பூமியைத் துளைத்துவிடும் அளவுக்கு மழையாய்ப் பொழிந்து தாக்குதல் தொடுத்தது. இதைக் கண்டு மாங்கொட்டை ஆரம்பத்தில் பயந்துதான் போனது. பிறகு சமாளித்துக் கொண்டது. நெளிந்து .. புரண்டு மழையில் மிதந்தது. பாறைகளுக்கிடையே அமர்ந்து கொண்டது.


 அங்கு வந்த சேர்ந்த காற்று விஷயத்தை அறிந்து, மழையுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது. காற்று சுழன்று.. சுழன்று அடித்தது. பயங்கரமாகத் தாக்குதல் தொடுத்தது. 


மாங்கொட்டை இப்போது உண்மையிலேயே பெரும் சிக்கலுக்கு ஆளானது. தத்தளித்தது. தவித்தது. ஆனாலும், கலங்கவில்லை. சோர்ந்துவிடவில்லை. தெப்பமாக நனைந்துவிட்ட அது பாறைகளுக்கிடையே பதுங்கிக் கொண்டது. 


 காற்றும் மழையும் தாக்குதலை நிறுத்திக் கொண்டன. 


பதுங்கியிருந்த மாங்கொட்டை, மெல்ல கண்விழித்தது. தோலைப் பிளந்து கால்களை மலைமீது பதித்துத் துழாவியது. ஆணிவேரை பாறைகளுக்கிடையே இறக்கியது. சல்லி.. வேர்களை மலைமீது படரவிட்டது. 


தன் மீது ஏதோ ஊர்வதைப் போல உணர்ந்து மலை மறுபடியும் விழித்துக் கொண்டது. மாங்கொட்டையைக் கண்டு துணுக்குற்றது. 


"ஏ! பொடியனே! இன்னுமா நீ உயிருடன் இருக்கிறாய்? மரியாதையாய் இங்கிருந்து ஓடிவிடு!" - என்று அலட்சியமாக கூறியது. வழக்கம் போலவே உறங்கிவிட்டது.


மாங்கொட்டை எதையும் சட்டை செய்யவில்லை. இன்னும் உறுதியாக முயற்சியை மேற்கொண்டது. மெல்லத் துளிர்விட்டு வளர்ந்தது. செடியானது.


மற்றொரு நாள். 


செம்மறி ஆடொன்று கடித்த கடியும், பிடித்து இழுத்த இழுப்பும் மாஞ்செடி, இதுவரையும் அனுபவிக்காத வேதனையாக இருந்தது. மரண வேதனை. 


ஆவேசம் கொண்ட மாஞ்செடி, இந்தமுறை ஆடு கடித்த இடத்தில் ஒன்றிற்கு இரண்டாய்ப் பக்க கிளைகளைவிட்டு இன்னும் வேகமாய் முளைக்க ஆரம்பித்தது. கிடு.. கிடு வென்று வளர்ந்தது. 


மலைப்பாறை, சூரியன், மழை, காற்று அனைத்தின் எதிர்ப்புகளையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு மாஞ்செடி தழைத்து வளர்ந்து மரமாகிவிட்டது. 


அந்த வழியே செல்லும் பயணிகளுக்கு அது ஓய்வெடுக்கும் புகலிடமாக இப்போது விளங்கியது. ஆடு-மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவருவோருக்கு அது இதமான நிழலைத் தந்தது. சுவை தரும் கனிகளை அள்ளி அள்ளி வழங்கியது. தன்னை நாடிவரும் பறவைகளுக்குச் சரணாலயமாக திகழ்ந்தது.

நீதி:

ஆரம்ப காலத்தில் தன்னைக் கடுமையாக எதிர்த்த மலை, சூரியன், மேகம் அனைத்தையும் சமாளித்து கனி கொடுத்த மாமரம் போல நாமும் இருக்க வேண்டும்


இன்றைய செய்திகள் - 18.04.2022


🔹அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தகுதியானவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


🔹தமிழகத்தில் நடைபெறக்கூடிய தொல்லியல் ஆராய்ச்சிகளில் இனி ஒவ்வோர் ஆண்டும் புதிய கண்டுபிடிப்புகள் வரக் காத்திருக்கின்றன என முதல்வரின் முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


🔹தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்.


🔹கடும் வெப்பநிலையையும் தாக்குப்பிடிக்கும் வகையில் இந்தியாவில் புதிய கரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய தடுப்பூசியை 37 டிகிரி செல்சியஸில் நான்கு வாரங்கள் வைத்துக்கொள்ளலாம். அதேபோல் 100 டிகிரி செல்சியஸில் 90 நிமிடங்கள் வரையில் வைத்துக்கொள்ளலாம்.


🔹இந்தியா, பிரான்ஸ் ராணுவ அதிகாரிகளிடையிலான 20-வது ஆண்டு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையின் போது 2 நாடுகளிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


🔹டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் 1,500 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் நடிகர் மாதவனின் மகன் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.


🔹மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் 12வது ஆடவர் ஆக்கி தேசிய சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தமிழக அணி முன்னேறியுள்ளது.


Today's Headlines


▶The Department of School Education has ordered the sending of details of those eligible for the promotion of graduate teachers in government schools.


 ▶Chief Secretary to the Chief Minister T. Udayachandran has said that discoveries are being made every year in the archaeological excavations that can take place in Tamil Nadu.


▶ Chance of rain in Tamil Nadu for 4 days - Director, Chennai Meteorological Center.


 ▶A new corona vaccine is being developed in India to withstand extreme temperatures.  The new vaccine can be stored at 37 degrees Celsius for up to four weeks.  Similarly, it can be kept at 100 degrees Celsius for up to 90 minutes.


▶ The 20th annual talks between Indian and French military officials began yesterday.  During these talks, it was decided to enhance security cooperation between the 2 countries.


 ▶Actor Madhavan's son wins silver in 1,500m freestyle at the Danish Open swimming competition.


▶ The Tamil Nadu team has advanced to the final of the 12th Men's Aggie National Championship in Madhya Pradesh.

 

 Prepared by

Cover women ICT_போதிமரம்Post Top Ad