விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுக்கத் தடை - Asiriyar.Net

Saturday, April 16, 2022

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுக்கத் தடை

 

டுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கத் தடை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  


தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி, வார இறுதி என, கடந்த 14 ஆம் தேதி முதல் வரும் 17 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.


இதற்கிடையே, விடுமுறை நாட்களிலும் ஒருசில தனியார் பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக, புகார்கள் எழுந்துள்ளன. மேலும் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்களை தனியார் பள்ளிகள் வலுக்கட்டாயமாக வரவழைப்பதாகவும் புகார்கள் வந்துள்ளது.  


இந்தநிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.








No comments:

Post a Comment

Post Top Ad